பதிவு செய்த நாள்
14
டிச
2012
11:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பகல்பத்து உற்சவம், இன்று துவங்குகிறது. இதையொட்டி இன்று மாலை, ஆண்டாள், ரெங்கமன்னார், மூலஸ்தானத்திலிருந்து, பகல் மண்டபத்திற்கு புறப்பாடு நடக்கிறது. பெரியாழ்வார் வம்சா வழியை சேர்ந்த வேதப்பிரான் பட்டரால், ஆண்டாள், ங்கமன்னருக்கு சீதனமாக, திருமாளிகையில் பச்சை காய்கறிகள் வழங்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வீதி உலா, ஆண்டாள், ரெங்க மன்னாருடன் மூலஸ்தானம் சேருதல் நடக்கிறது. டிச..24ம் தேதி, ராப்பத்து நிகழ்ச்சி துவங்குவதையொட்டி, அன்று காலை 7.05 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.