ஆண்களுக்கு ஆபத்து! ..வேப்பிலை வைத்து வழிபட்ட மக்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2012 11:12
மங்கலம்பேட்டை: மாலை நேரத்தில் அமாவாசை பிறந்ததால், ஆண்களுக்கு ஆபத்து என தகவல் பரவியதால், மங்கலம்பேட்டை பகுதியில் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் மாலை, 5:10 மணிக்கு, சதுர்த்தசி முடிந்து, 5.11 மணிக்கு, அமாவாசை பிறந்தது. இதனால் வீட்டிலுள்ள ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என, தகவல் பரவியது. கடலூர் மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் உட்பட கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு, 3 அகல் விளக்குகளை ஏற்றி, வேப்பிலை வைத்து வழிபட்டனர்.