யோகபைரவர் சம்பக சஷ்டி விழா அஷ்ட பைரவர் யாகம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2012 12:12
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யோக பைரவருக்கு, சம்பக சஷ்டி விழாவை முன்னிட்டு, அஷ்டபைரவர் யாகம் துவங்கியது. சம்பகசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறும். நேற்று யோகபைரவர் வெள்ளி அங்கி அணிந்து, விபூதிக் காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9 மணிக்கு,யோகபைரவர் சன்னதி முன், யாகசாலை மண்டபத்தில் புனித நீர் அடங்கிய 11 கலசங்கள் வைக்கப்பட்டு, யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து, மூலவருக்கு 8 சிவாச்சாரியர்களால், சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து,அபிஷேக, சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடந்தன. காலை முதல் பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாக்குழுவினர் செய்தனர்.