பதிவு செய்த நாள்
14
டிச
2012
12:12
ஆத்தூர்: ஆத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்ற கோவிலில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்கு, 3,000 பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் சென்றனர். சென்னை அருகே, மேல்மருவத்தூரில், ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது போல், தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் செல்கின்றனர். ஆத்தூர், நரசிங்கபுரம், அம்மம்பாளையம், கல்லாநத்தம் உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 3,000 பெண் பக்தர்கள், ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள, ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்ற கோவிலில், மாலை அணிந்து, இருமுடி கட்டிக் கொண்டு மேல்மருவத்தூர் புறப்பட்டனர். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.