Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா ... தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பணசாமி கோவில் திருவிழா; 560 ஆடுகள் பலியிட்டு
எழுத்தின் அளவு:
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பணசாமி கோவில் திருவிழா; 560 ஆடுகள் பலியிட்டு

பதிவு செய்த நாள்

31 மே
2025
04:05

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற தேத்தாம்பட்டி கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில் 560 ஆடுகள் பலியிட்டும், சாத உருண்டைகள் படைத்தும் வழிபட்டனர்.


சாணார்பட்டி அருகே வி.டி.பட்டி ஊராட்சி தேத்தாம்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது.இங்கு ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுகிறது.பழங்காலத்தில் இருந்தே ஆண்கள் மட்டும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டு வருகின்றனர்.பெண்கள் அப்போது அப்பகுதிக்கு வரக்கூடாது. திருவிழா நடக்கும் நாள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததால்,அதிலிருந்து திருவிழா நடக்கும் பகுதிக்கு பெண்கள் யாரும் வரவில்லை.இந்த திருவிழா இன்று மதியம் முதல் நடந்தது. பின்னர் கைக்குத்தல் பச்சரிசி சாதம்,560 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, அதன் தலைகளை கோட்டை கருப்பண்ணசாமி கோவில் முன்பு வைத்து, சாதத்தை உருண்டைகளாக உருட்டி பூஜை செய்தனர். அதனைதொடர்ந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவுகள் அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.


இந்த விழாவில் வி.எஸ்.கோட்டை,கோவில்பட்டி,காமாட்சிபுரம்,வடக்காம்பட்டி,பாலகவுண்டன்பட்டி,கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த திருவிழா நடத்தப்படுகிறது.இதற்காக வயல்களில் விளைந்த நெல்மணிகளை கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேர்த்திக்கடனாக பெறப்படும். ஆடுகளை பலியிட்டு சமைத்து கோட்டை கருப்பண்ண சாமிக்கு படையலிட்டு அதை ஆண்களுக்கு மட்டுமே அன்னதானமாக வழங்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar