காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி கொடியேற்றத்துடன் துவங்கியது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடியில் உள்ள சவுந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும், வைகாசி விசாக விழாவில், தேர் திருவிழா பிரிசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடக்கும் வைகாசி விகாக திருவிழாவில் முதல் நாளான இன்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து கொடியேற்றம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, துணை தலைவர் மணிமாறன், செயல் அலுவலர் செல்வமணி, கலைமகள் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், அறங்காவலர் குழு தலைவர் அறிவழகன், அறங்காவலர் குழு செந்தில்குமார், நெடுமாறன், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர். தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. வரும் 4ம் தேதி தெருவடைச்சான், 6ம் தேதி திருக்கல்யாணம், முக்கிய விழாவான தேர் திருவிழா 8ம் தேதி நடக்கிறது. 9 ம் தேதி பல்லக்கில் வீதியுலா, தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.