Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் 4 உப ... ஈத் முபாரக் திருநாள் வாழ்த்துக்கள்; பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஈத் முபாரக் திருநாள் வாழ்த்துக்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருங்கப்பாளையம் மாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருங்கப்பாளையம் மாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
12:06

திருப்பூர்: திருப்பூர், குமார் நகர், முருங்கப்பாளையம் இந்திரா நகர் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழா, கடந்த, 2ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. குமார் நகர் கருப்பராயன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், மேளதாளத்துடன் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை வேள்வி பூஜைகள், சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் ஒலிக்க, கோலாகலமாக நடந்தது. கொடுவாய் அழகு மயில் கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, நான்காம் கால வேள்வி பூஜைகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 7:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து, கலசங்கள் புறப்பாடானது. மங்கள இசை, வேதபாராயணத்துடன், காலை, 8:00 முதல், 8:30 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது. பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் அர்ச்சகர் உத்தமலிங்கேஸ்வர சிவம் குழுவினர், யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர். கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar