நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், சந்தனம், இளநீர், பன்னீர், புஷ்பம்,தேன், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதி, அசோக்நகர் பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதிகளில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.