மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தில், 41 அடி உயர மகா காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று மாலை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, இன்று காலை இரண்டாம் கால பூஜை, மகா பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. 9:30 மணிக்கு மேல், கடம் புறப்பாடு நடந்தது. சுந்தரமுருகன் குருக்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் 41 அடி உயர மகா காளியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.