திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு செல்லும் பெரியகுளம் வெற்றிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 10:07
பெரியகுளம்; பெரியகுளம் பகுதிகளிலிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இரு தினங்களாக ஆயிரம் கிலோ வெற்றிலை அனுப்பப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடக்கிறது. சுபகாரியங்களில் வெற்றிலையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி பகுதியில் வெற்றிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இயற்கை விவசாயத்தில் விளைவதால் தமிழகம் முழுவதும் இந்தப்பகுதி வெற்றிலைக்கு மவுசு அதிகம். கோயில் பூஜைகளுக்கு பச்சைக்கொடி வெற்றிலை ஆயிரம் கிலோதிருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 200 முதல் ரூ.220 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெரியகுளம் பகுதி வெற்றிலை செல்வது வெற்றிலை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.