பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே தேர் திருவிழாவின் போது, அச்சு முறிந்ததால், சுவாமியுடன் தேர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலுார் மாவட்டம், கோவில்பாளையம், தேனுார் கிராமத்தில் அய்யனார் – பூரணி புஷ்கலாம்பிகை கோவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை, அய்யனார், செல்லியம்மன், மாரியம்மன் சுவாமிகள் தனித்தனியே 30 அடி உயரம் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். காலை, 11:00 மணிக்கு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கினர். அப்போது, அய்யனார் பூரணி புஷ்கல அம்பிகை வீற்றிருந்த தேரின் அச்சு முறிந்து, அலங்கார பகுதி மட்டும் பக்கவாட்டில் சாய்ந்து தொங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.