அவிநாசி; ஸ்ரீ மந் அருணகிரிநாத ஸ்வாமிகள் மகா குருபூஜை எனும் மகா சிவபூஜை பெருவிழா நடைபெற்றது. அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சுப்பையா சுவாமிகள் திருமடத்தில் பாம்பன் ஸ்ரீமந் குமரகுரு தாசர் சுவாமிகளின் குருவான ஸ்ரீமந் அருணகிரிநாத ஸ்வாமிகளின் மகா குருபூஜை எனும் மகா சிவபூஜை பெருவிழா நடைபெற்றது. முன்னதாக பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம், திருப்பதிகம் பாடி மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவமுது வழங்குதல்,சிவபூஜை பரிபூரணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினர், அடியவருக்கு அடிமை திருக்கூட்டம், சிவசிவ திருக்கூட்டம் மற்றும் மெய்யன்பர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.