பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2025 11:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னிசட்டி சட்டி திருவிழா நடைபெறுகிறது.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா ஜூலை 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாள் திருவிழா நடந்து வருகிறது. தினமும் பல்வேறு மண்டகப்படியில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 8 ம் நாள் மண்டகப்படி வணிகவைசிய அபிவிருத்தி சங்கத்தில் அம்மன் எழுந்தருளினார். தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன் உட்பட நிர்வாகிகள் வரவேற்றனர். மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல் பங்கேற்றார். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் முத்து, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்செய்திருந்தனர். அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று அக்னிசட்டி திருவிழா: நேற்று அதிகாலை 4:00 மணி முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றியும், மா விளக்கு, ஆயிரம் கண் பானை எடுத்து அம்மனை வழிபட்டனர். முக்கிய திருவிழாவான பத்தாம் நாள் திருவிழாவான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.