முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமம் பூரண, பொற்கொடியாள் சமேத பூங்குளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் கழித்து மண்டலபூஜை விழா நடந்தது.கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜை,பூர்ணாஹீதி நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தி பகவதி குருக்கள் தலைமையில் பூரண, பொற்கொடியாள் சமேத பூங்குளத்து அய்யனார்,சுடலைமாடசாமி, சேதுமாகாளி உட்பட பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி பூஜை செய்தார். பின் உலக நன்மை வேண்டி சிவலிங்கம் வடிவில் வடிவமைக்கப்பட்ட 1008 சங்காபிஷேகம் பூஜை தொடர்ந்து பால்,மஞ்சள்,சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது. மாலை 508 விளக்குபூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர். இதேபோன்று முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தில் உள்ள முத்து கருப்பண்ணசாமி,அக்னி மாடசாமி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது.