கர்த்தவ்ய விஷயே நியத: சங்கல்ப வ்ரதம் என்பர். ஒருவர் தான் செய்ய வேண்டிய செயலை, உறுதியான மனதுடன் தீர்மானம் செய்வதற்கே விரதம் என்று பெயர். ஆரோக்கியம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற நன்மைகள் நிறைவேற தெய்வஅருள் வேண்டி விரதம் மேற்கொள்வர். விரதநாளில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது, பகல் தூக்கம் கூடாது. உடல்நிலையைப் பொறுத்து எளிய உணவு உண்ணலாம். நாள் முழுவதும் தெய்வ சிந்தனையில் ஈடுபடுவது அவசியம்.