சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 11:08
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சாமிதோப்பு தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறும்ம். நிகழாண்டு ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 5 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, கொடிப்பட்டம் தயாரித்தலை தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. குரு பையன் ராஜா கொடியேற்றினார். விழாவில் நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வருதல் ஆகியவை நடைபெறும். விழா நாள்களில் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி ஆகியவை நடைபெறும். விழாவின் 11ம் நாளான செப்.1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் பஞ்சவா்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தலைமைப்பதி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.