ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலயம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 10:08
கமுதி; கமுதி குண்டாறு எட்டுக்கண் பாலம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக அமைதி வேண்டியும், மழைப்பெய்து விவசாயம் செழித்திட வேண்டி கஞ்சிகலயம் நிகழ்ச்சி நடந்தது.இதனைமுன்னிட்டு பக்தர்கள் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து கமுதி பஸ் ஸ்டாண்ட்,பேரூராட்சி அலுவலகம்,கண்ணார்பட்டி உட்பட முக்கிய வீதிகளில் கஞ்சி கலயம்,அக்னிச்சட்டி,முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்கு வந்தனர்.பின்பு திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்தனர்.