பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்ட விநாயகர் செட்; : பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், எம்பிக்காக விநாயகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 11:08
ஒசூர்; ஸ்ரீநகரில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலக வடிவில் விநாயகர்ளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையொட்டி காவல் நிலைய கட்டிடத்தில் காக்கி வடிவில் விநாயகர்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு விநாயகர் சதூர்த்தியையொட்டி உயர்நீதிமன்ற வடிவில் அமைக்கப்பட்டு நீதிபதி, வழக்கறிஞர்கள் தோற்றத்தில் விநாயகர்கள் காட்சியளித்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் பழைய பாராளுமன்ற அலுவலக வடிவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில்
சபாநாயகர் இருக்கையில் பிரம்மாண்ட விநாயகர் மூலவராக வைக்கப்பட்டு இடது புறத்தில் பிரதமர் வலது புறத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருக்கைகளில் எம்பிக்களும் அமரும் வகையில் வடிவமைத்துள்ளனர். அனைவரும் விநாயகர்களாகவே காட்சியளிக்கும் நிலையில் பொதுமக்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக கொண்டு சென்று கறைக்கப்பட உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர். அவைக்கு உள்ளே அம்பேத்கர், நேரு, அன்னை தெரசா அப்துல் கலாம் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. எம்பிக்கள் வரிசையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் அமர்ந்திருப்பதாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.