ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வெளிபட்டணத்தில் உள்ள அக்னி வீரபத்திர சுவாமி, பெரிய கருப்பர், ஆழ்வார், அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு ஆக.,28 முதல் யாகசாலை பூஜைகள் செய்தனர். நேற்று காலையில் கும்ப கலசங்கள் புறப்படாகி கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது.
அதன் பிறகு அக்னி வீரபத்திர சுவாமி, பெரிய கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபி ேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே இளமனுார் தர்ம முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. இரண்டு கால யாகபூஜைகள் செய்து நேற்று காலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
மூலவர் தர்ம முனீஸ் வரருக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபா ராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆக., 28ல் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை யுடன் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு திருமுறை பாராயணம் உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு காலை 10:15 மணிக்கு மூலவர் ஆதி முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
பின் மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை பெரியபட்டினம் கிராம பொதுமக்கள் மற்றும் ஹிந்து மகாசபையினர் செய்திருந்தனர்.