விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள்; அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2025 06:09
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி மரம், 5 பிரகாரங்கள் என சிறப்பை பெற்றுள்ளன. விநாகரின் இரண்டாம் படைவீடான ஆழத்து விநாயகர் சன்னதி, இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக உற்சவம், ஆரபூர திருக்கல்யாணம் வெகு விசமர்சையாக நடக்கும். கோவிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த 2002ம் ஆண்டு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபி ேஷகம் நடந்தது. பின்னர், 20 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2022ம் ஆண்டு, கோவில் கோபுரங்கள், சிதைகள் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், இந்த கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால், தற்போது கோபுரங்கள் முழுவதும் ஆல, அரசமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் கோபுரத்தின் மீது அதிகளவில் மண்டியுள்ளன. இதனால், ஆயிரம் ஆண்டு பழமையான கோபுரங்கள், விரிசல் ஏற்பட்டு, சிதிலமடையும் அபாயம் உள்ளது. எனவே, கோவில் கோபுரத்தில் மண்டியுள்ள செடிகளை அகற்ற, அறநிலைய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.