விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் மதுரை அருட்பணியாளர் பிரின்ஸ் ராஜா, அலெக்ஸ் ஞானராஜ், பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து ஆரோக்கிய அன்னையின் திரு உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தனர். விழா நாட்களில் திருப்பலி, மறையுரை நடந்தது.
நேற்று முன்தினம் மாலை விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள் ராயன், பாதிரியார் ததேயுஸ் ராஜன் தலைமையில் ஆரோக்கிய அன்னை மின் அலங்கார தேர்பவனி நடந்தது. சர்ச்சில் இருந்து புறப்பட்டு ஆர்.ஆர்., நகர் மெயின் ரோடு வழியாக சர்ச் வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக பங்கேற்றனர். அதன் பின் திருவிழா திருப்பலி, மறையுரை நடந்து, கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.