காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் அரண்மனை வடிவில் யாகசாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2025 10:09
மேட்டுப்பாளையம்; காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அரண்மனை வடிவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
காரமடையில் சந்தை அருகே காமாட்சி அம்மன் கோவிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 5:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு கற்பக விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மேல் காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதை யொட்டி கோவில் முன் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. யாகசாலை அலங்காரம் குறித்து காரைக்குடி யாகசாலை ஸ்தபதி முருகேசன் கூறியதாவது: கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 30 அடி நீளம், 10 அடி அகலத்தில் அரண்மனை யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு குண்டங்கள், மூன்று வேதிகைகள், யாகசாலையின் மையப் பகுதியில் பத்ம வேதிகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வர்ணம் பூசுதல், பேப்பர் அலங்கார வேலைப்பாடுகளில், 25 பேர், கடந்த ஒரு வாரமாக பணியில் ஈடுபட்ட னர். இவ்வாறு அவர் கூறினார்.