பெ.நா.பாளையம்; பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, கவுண்டம்பாளையத்தில் பா.ஜ., சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.
டி.வி.எஸ்., நகர் காயத்திரி சேர்த்தன கேந்திர மஹாலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பா.ஜ., கோவை நகர் மாவட்ட பொதுச் செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தனர். ஹோமம், கோமாதா பூஜை மற்றும் இந்தியாவில் உள்ள, 146 கோடி மக்களின் நலனை குறிக்க, 1,460 களி மண் விளக்குகள் ஏற்றப்பட்டன. விளக்குகள் மோடிஜி 75 என்ற வடிவில் அமைக்கப்பட்டது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த கலசத்தை பெண்கள் மட்டுமே தலையில் சுமந்து டி.வி.எஸ்., நகரில் இருந்து இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இது ‘ஆபரேஷன் சிந்துார்’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக அமைந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி, தாமு, மாவட்ட செயலாளர் சதீஷ், கவுண்டம்பாளையம் முன்னாள் மண்டல தலைவர் விஜய காண்டீபன், சங்கர் உள்ளிட்ட மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.