Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீதா கல்யாண உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2012
11:12

கரூர்: பசுபதீஸ்வர ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சீதா கல்யாண உற்வச விழா வெகு சிறப்பாக துவங்கியது. கரூரில் ஆண்டுதோறும், மார்கழி மாதம் சீதா கல்யாண உற்சவ விழா நடந்து வருகிறது. 12வது உற்சவ விழா கடந்த, 24ம் தேதி காலை, 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 மணிக்கு அன்னபூரணி மஹாலட்சுமி ஹோமம் நடந்தது. மாலை, 6 மணிக்கு பசுபதி ஐயப்பா ஸ்வாமி புறப்பாடு மற்றும் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் மஹா சண்டி ஹோமங்கள் நடந்தது. மாலை நடந்த குத்து விளக்கு பூஜையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இன்று காலை, 6 மணிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வருதல், 9 மணிக்கு ஐயப்பசாமிக்கு அபிஷேகம், 9.30 மணிக்கு ஏக தின லட்சார்ச்சனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு திருவண்ணாமலை எழில் அரசியின், பாட்டு கலந்த பட்டி மன்றம் நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 8 மணிக்கு கணபதி பூஜையும், இரவு, 8 மணிக்கு பஞ்சபதி பூஜையும், 6ம் தேதி காலை, 9 மணிக்கு சீதா கல்யாண உற்வசமும், 10ம் தேதி காலை, 7 மணிக்கு ஹனுமந்த் ஜெயந்தி உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்க டிரஸ்ட் தலைவர் குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar