நத்தாநல்லுார் எல்லையம்மன் கோவிலில் தெப்போற்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2026 05:04
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவிலில், இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் பல்வேறு காலை, மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணைகள் நடைபெற்று வந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று இரவு 8:00 மணிக்கு அக்கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிம்ப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவை காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில், நத்தாநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.