திருப்புத்தூரில் நவராத்திரி விழா; அக்.2ல் அம்மன் அம்பு எய்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2025 10:09
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் மற்றும் பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.2ல் அம்மன் அம்பு எய்தல் நடைபெறும்.
இக்கோயில்களில் நவராத்திரி விழா செப்., 23ல் துவங்கியது. திருத்தளிநாதர் கோயிலில் தினசரி மூலவர் சிறப்பு அலங்காரமும், கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை சரஸ்வதி அலங்காரத்தில் தீபாராதனை நடைபெறும். பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையும், லட்சார்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து தினசரி லட்சார்ச்சனையும், மாலை உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனையும் நடந்து வருகிறது. நாளை சிவபூஜை அலங்காரம் நடைபெறும். அக்.2ல் திருத்தளிநாதர் கோயிலில் மாலை 5:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேரடித் தெருவில் அம்பு எய்தலும், தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும். பூமாயி அம்மன் கோயிலில் மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழந்தருளி அம்பு எய்தல் நடைபெறும்.