தையல்சொற் கேளேல் என்பது ஆத்திச்சூடி. அவ்வையாரே பெண்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று சொல்லியிருப்பது ஏன்? தையல் என்பதற்கு தன்னைப் பிறர் காணும் வண்ணம் அலங்கரித்துக் கொள்பவர் என்பது பொருள். அத்தகையவர்கள் நன்மகளிர் ஆகார். கந்தபுராணத்தில் மணந்து கொள்ளும் தகுதியற்ற பெண்கள் இன்னார் என்று ஒரு பட்டியல் வருகிறது. அதில், நலம்பெறப் புனைகின்றோர் என்று இருக்கிறது. தம்மைப் பிறர் காணும்படி அணி செய்துகொள்பவர்களை மணம் புரியலாகா மகளிர் என்று விலக்கியிருப்பார். அத்தகையோரின் சொற்களைத்தான் கேட்கக்கூடாது. நன்மகளிர் சொல்லை எப்போதும் கேட்கலாம்!