Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ... ஜம்புகேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புலவர்கள் பாடலுடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2012
11:12

சென்னிமலை: கொங்கு வேளாளர் இனத்தில், பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளுக்கான பொன்னூஞ்சல் விழா, திருவாதிரை நாளில், டிசம்பர் 28 கோலாகலமாக நடந்தது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில், ரத்தின வேணாடுடையார் அரண்மனையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவாதிரை நாளில், பொன்னூஞ்சல் விழா நடக்கிறது. கொங்கு வேளாளர் இனத்தில், முதன்மையான குலமாக கருதப்படும், பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளை, பொன்னூஞ்சல் ஆட்டும் சீர், தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. சோழ மாமன்னர், இரண்டாவது கரிகாலர், தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேரமன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த, பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க மும்முடி பட்டம், வேணாடுடையார் பட்டம் கொடுத்து, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை வேணாடருக்கு அளித்து, பொன்னூஞ்சல் ஆடும் உரிமையையும் தந்துள்ளார். சங்கரண்டாம்பாளையத்தில், அன்று முதல், மார்கழி திருவாதிரையில், மூன்று முதல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விழா நடக்கிறது. குல வழக்கப்படி, அரண்மனை முழுவதும் வாழை, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்தப்படும், சீர் செய்ய வ÷ண்டிய பெண் குழந்தை விரதம் இருந்து, அமராவதி ஆற்றில் நீராடுவர். அங்குள்ள ரத்தினமூர்த்தி கோவில், குலதெய்வத்தை வணங்கி, குழந்தையை மணப்பெண் போல் அலங்கரித்து, பட்டம்கட்டி, தாரை, தப்பட்டை, மேள தாளம் முழங்க, பெண்ணின் தாய்மாமன் தோளில் குழந்தையை தூக்கி வருவர்.அரமணையில், 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாடுடையார் முன்னிலையில், குலகுருவான திருக்கொற்றைத் திருவூராதீனம் சௌந்தரகாந்த ஜடாதர பரமேஸ்வர பண்டித குருசாமி ஆசி வழங்க, பெண் குழந்தையை ஊஞ்சலில் அமர வைத்து, புலவர்கள் பாடல்பாடி ஊஞ்சலை ஆட்டினர்.டிசம்பர் 28 நடந்த விழாவில், 68 பெண் குழந்தைகள் பொன்னூஞ்சல் விழாவில் பங்கேற்றனர். ஊஞ்சலாடிய குழந்தைகளுக்கு, தாய்மாமன்கள், வசதிக்கேற்ப சீர் செய்து மகிழ்ந்தனர். பின், விருந்து படைத்து, சீர் செய்த தாய்மாமனை, ஏழடி நடந்து வந்து ஊருக்கு வழியனுப்பினர். சோழன் கரிகாலன் உரிமையளித்த சீர் மரபினை இன்னும் இவர்கள் பெருமையாக கொண்டாடுகின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மங்களூர், ஊட்டி, பாலக்காடு, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை, ஒட்டன்சத்திரம், ஈரோடு, சென்னிமலை, தாராபுரம் பகுதிகளில் இருந்து அதிக அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். ஏற்பாடுகளை, 32வது பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாடுடையார் தலைமையில் ரத்தினமூர்த்தி, ராமசாமி, வெங்கடாசலம், அருணாச்சலம் உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar