ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2026 10:04
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு அபிஷேகம், அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி அம்மனுக்கு அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவர். யாழினி, பூ பல்லக்கு, அன்னம், ஊஞ்சல் வாகனங்களில் சுவாமி நகர்வலம் நடக்கிறது. ஏப்.13-ல் பூக்குழி திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கிருஷ்ணம ராஜூ தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.