Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க ... நத்தம் மேலத்தெரு பகவதி அம்மன் கோவில் திருவிழா நத்தம் மேலத்தெரு பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
01:04

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கோலாகலமாக நடந்தது. நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. 


அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 23ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனித் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர் திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்படத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணி யசுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து, கோயில் ஒடுக்க மண்டபத்தில்  சுவாமிகள் எழுந்தருளினர்.


திருக்கல்யாணம்: கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் மீனாட்சி அம்மன், அடுத்ததாக பிரியாவிடை, சுந்தரேஸ்வரரை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். தங்கம், வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடந்தன. மாங்கல்ய பூஜைக்குப்பின்பு, சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. மாப்பிள்ளை, பெண் பிரதிநிதியாக  சிவாச்சார்யார்கள் மாலை மாற்றி திருமண சம்பிரதாயங்கள் செய்தனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு வெண் பட்டும், தெய்வானைக்கு பச்சை பட்டும் சாத்துப்படியானது.  மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரிவியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்த பின்பு தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar