பதிவு செய்த நாள்
29
டிச
2012
11:12
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த ”.குளத்தூர் சரவணபுரத்தில் உள்ள மகா விஸ்வரூப ஆறுமுக பெருமாள் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு மகா யாகம் நடந்தது. சங்கராபுரம் அருகே ”.குளத்தூர் சரவணபுரத்தில் 81 அடி உயர மகா விஸ்வரூப ஆறுமுக பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்து வருகிறது. மாத பவுர்ணமி யான டிச, 27 சிறப்பு வேள்வி யாகம் நடந்தது. வேள்வியில் மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், நெய், பழங்கள், சர்க்கரை, வெண்கடுகு, மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை இடப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் வற்றல் வேள்வியில் போடப்பட்டது. விடியல் சின்னத்தம்பி ”வாமி தலைமையில் நடந்த வேள்வியில் நரசிங்கபுரம் பேரூராட்சி தலைவர் காட்டுராஜா, இளஞ்செழியன், சத்தியமூர்த்தி, பாஸ்கரன், சரோஜா, சண்முகம், மணி பிரபாகரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.