விழுப்புரம், திண்டிவனம் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2012 11:12
திண்டிவனம் : விழுப்புரம், திண்டிவனம் பகுதி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள அறம்வளர்த்த நாயகி உடனுறை அன்பநாயக ஈஸ்வரர் கோவிலில் டிசம்பர் 28 ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 27ம் தேதி இரவு 7 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் டிசம்பர் 28 காலை 6 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் நடராஜர் சுவாமி நடன அலங்காரத்தில் சிவகாமசுந்தரி தாயாருடன் அருள் பாலித்தார். இதேபோல் திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவை முன்னிட்டு டிசம்பர் 27 இரவு நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோபுர தரிசனமும், மாட வீதியுலாவும் நடந்தது. பூஜைகளை ராதா குருக்கள், பாலாஜி குருக்கள் செய்தனர். ரிஷிபவாகனம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் ஆதீவாலீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதனையொட்டி காலை 8 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட நடராஜர் சுவாமிகள் ஆனந்த தாண்டவத்தில், ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.