பதிவு செய்த நாள்
29
டிச
2012
11:12
கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் தேரோட்டத்தை எம்.எல்.ஏ., செங்கோட்டையன், வடம் பிடித்து துவக்கி வைத்தார்.கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா டிசம்பர், 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தேன், பால், சந்தனம், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகமும், டிசம்பர், 24ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், டிசம்பர் 27 மாவிளக்கு பூஜை நடந்தது.டிசம்பர் 27 நடந்த குண்டம் திருவிழாவில், கோபி சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, நேர்த்தி கடனை செலுத்தினர்.டிசம்பர் 28 காலை தெப்போற்சவ நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடந்தது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். கோவில் வளாகம் அருகே துவங்கிய தேரோட்டம், வடக்கு வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.தேரோட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகராட்சி தலைவி ரேவதிதேவி, துணைத்தலைவர் செல்வம், மாணவரணி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இன்று இரவு, 10 மணிக்கு மலர் பல்லக்கு ஊர்வலம், சிறப்பு வாண வேடிக்கை நடக்கிறது. டிசம்பர், 30ம் தேதி காலை, 9 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம், பகல், 12 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 31ம் தேதி மறுபூஜை நடக்கிறது.