பதிவு செய்த நாள்
29
டிச
2012
11:12
அரியலூர்: ஆலந்துறையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும், டிசம்பர் 28 ஆருத்ரா தரிசனம் நடந்தது.மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, அரியலூர் ஆலந்துறையார் சிவன் கோவிலில் டிசம்பர் 27 இரவு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு, சிவாச்சாரியார் ஞானாஸ்கந்தன் தலைமையில் சிறப்பு அபிஷேகமும், டிசம்பர் 28 அதிகாலை ஆருத்ரா தரிசனமும் நடந்தது.டிசம்பர் 28 காலை, 9 மணிக்கு துவங்கி, அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து டிசம்பர் 28 மதியம் ஆலந்துறையார் சிவன் கோவிலில், நடராஜரின் ஆனந்த நடன நிகழ்ச்சியும் நடந்தது.*அரியலூர் கைலாசநாதர் கோவில், ஜெயங்கொண்டம் கழுமலநாதர் கோவில், செந்துறை சிவதாண்டேஸ்வரர் கோவில், திருமழபாடி வைத்தியநாத ஸ்வாமி கோவில், திருமானூர் கைலாசநாதர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில், உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவில், பொய்யாதநல்லூர் கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல சிவாலயங்களிலும், மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, டிசம்பர் 28 ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. மேற்கண்ட உற்சவ நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு நடத்தினர்.