காரக்கொரையில் பூ குண்ட திருவிழா பரவசமடைந்த 9 கிராமத்தின் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2012 11:12
குன்னூர் : ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, காரக்கொரை பகுதியில் டிசம்பர் 28 பூ குண்டம் திருவிழா நடந்தது. நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி பேரகணியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்த போது, உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. டிசம்பர் 28 ஜெகதளா ஈரமாசி ஹெத்தையம்மன் திருவிழா துவங்கியது. அதன் ஒரு பகுதியாக காரக்கொரையில் பூ குண்டம் திருவிழா நடந்தது. ஜெகதளா, காரக்கொரை,பேரட்டி, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி, மஞ்சுதளா, மல்லிக்கொரை, ஓதனட்டி உட்பட 9 கிராமங்கள் சார்பில், காரக்கொரை பகுதியில் திருவிழா கோலாகலமாக நடந்தது. குண்டத்தில் பூஜாரி தலைமையில், விரதமிருந்த 9 பேர் இறங்கினர். இந்த விழாவில் 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். வரும் திங்கட்கிழமை ஜெகதளாவில் நடக்கும் ஹெத்தையம்மன் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.