Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிழ்ச்சிக்கு அடிப்படை தர்மம்: துன்பத்துக்கு அடிப்படை அதர்மம்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
எழுத்தின் அளவு:
மகிழ்ச்சிக்கு அடிப்படை தர்மம்: துன்பத்துக்கு அடிப்படை அதர்மம்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை

பதிவு செய்த நாள்

28 நவ
2025
10:11

புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டு உள்ள, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னி தானம், ‘இந்தியா ஹேபிடட்’ வளாகத்தில் பக்தர்கள் மத்தியில் அருளுரை வழங்கினார்.


சிருங்கேரி ஜகத்குருவின் அருளுரை: ஒரு காலத்தில், நம் நாட்டின் ஒரு மாமனிதர் சமுதாயத்தை சீர்திருத்த விரும்பினார். இதற்காக அவர் பல மன்னர்கள், நிர்வாகிகள், அறிஞர்கள் என பலரை அணுகியும் பலனில்லை. இறுதியில் குடிமக்களிடம் பேசினார். அவர்களும், தர்மத்தைப் புரிந்துகொண்டாலும், வேலைக்குச் செல்ல வேண்டிய கடமை காரண மாக பாதியிலேயே சென்றனர். அதன் பின், அவர் தான் சொல்ல வந்த அனைத்தை யும் நுால்களாக எழுதினார். அவர் தான், பர்த்ருஹரி என்னும் அறிஞர். அவர் நீதி சதகம், சிருங்கார சதகம் மற்றும் வைராக்கிய சதகம் ஆகிய சதகங்களை எழுதினார். சமுதாயத்துக்கு அறிவுரை வழங்கக்கூடிய அறிஞர்களும், அந்த ஞானத்தைக் கேட்டுச் செயல்படுபவர்களும் அரிதானவர்கள். இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது; வசதி, வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. அதே சமயம் துன்பங்கள் இன்னும் நீடிக்கின்றன; மகிழ்ச்சியாக இருப்போர் இப்போதும் இருக்கின்றனர்.


மகிழ்ச்சிக்கும் துன் பத்துக்கும் அடிப்படை, தர்மம் மற்றும் அதர்மம் தான். மகிழ்ச்சியும் துன்பமும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை அல்ல. அவை தர்மம் மற்றும் அதர்மத்துடன் இணைந்தவை. நிரந்தரமான மகிழ்ச்சியை விரும்புவதும், துன்பத்தைத் தவிர்க்க விரும்புவதும் அனைவருக்கும் பொதுவானது. நாம் விரும்பினாலும், ஒவ்வொருவரும் ஏதோவொரு வடிவத்தில் துன்பத்தை அனுபவிக் கிறோம். கடோபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த உலகமே உண்மை என்று நம்பி, மோகத்தில் மூழ்கியவன் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் சம்சாரச் சுழற்சியில் வரு கிறான் என்று எமன், நசிகேதனுக்கு உபதேசித்தார். அத்வைதமும் ஸ்வதர்மமும் இன்று நம் தர்மத்தின் பாரம்பரியத்தில் உள்ளவர்கள் கூட, வசுதைவ குடும்பகம், ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து, லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து, போன்ற அடிப்படை கொள்கைகளை அறியாத ஒரு நிலையில் உள்ளோம். இறுதியில், ஒரே சைதன்யம்தான் ஒவ்வொரு உயிரிலும் ஊடுருவி இருக்கிறது எனும் அத்வைத தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த உபநிடத போதனையை 12 நுாற்றாண்டுக்கு முன் அவதரித்த ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் விளக்கினார்.


பகவத் கீதை, இந்த அறிவைப் பற்றி குறிப்பிடும்போது, அதனை அறிந்த பின், வேறு எதுவும் அறியப்பட வேண்டியதில்லை என்று கூறுகிறது. அர்ஜுனன் ராஜ்யத்தை வேண்டாம் எனும்போது, பகவான் அது ஸ்வ-தர்மம் (தனது கடமை) என்று சுட்டிக்காட்டினார். ஆகவே, ஸ்வதர்மம் எனப்படும் அவரவர் தர்மத்தினை பின்பற்றுவதே மோட்சத்தின் மிக உயர்ந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கான முதல் படியாகும். ‘தர்மத்தின் பாரம்பரியத்தில் சிறப்பு முயற்சிகள் மூலமாக மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அம் சங்கள் உள்ளன’ என்பதை மக்கள் அறிய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இப்போதும் இதையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங் களிப்பைச் செய்யும் முக்கிய நபர்கள் இங்கே இருக்கிறீர்கள். இது பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் இன்னும் அதிகமாகப் பாடுபட வேண்டும். அன்னை ஸ்ரீ சாரதாம்பாள் உங்களுக்கு அந்த பலத்தை வழங்க வேண்டும் என ஆசீர்வதிக்கிறேன். இவ்வாறு சுவாமிகள் உரை நிகழ்த்தினார். – நமது நிருபர் –: 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar