திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் தரிசனத்திற்காக பொதுமக்கள் 8 மணி நேரம் காத்திருந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டையொட்டி, நேற்று திருப்படி திருவிழா நடந்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து, காலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பச்சை மரகதக்கல் பதிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. புத்தாண்டு என்பதால் இன்று மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் திருத்தணி மலை மீது குவிந்துள்ளனர். இதனால் 8 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.