Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலையூர் பழமை வாய்ந்த காசி ... திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததால் தீக்குளித்து பக்தர் தற்கொலை; கடவுளுக்காக செய்கிறேன் என உருக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததால் தீக்குளித்து பக்தர் தற்கொலை;  கடவுளுக்காக செய்கிறேன் என உருக்கம்

பதிவு செய்த நாள்

19 டிச
2025
11:12

மதுரை: தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும், மதுரை போலீஸ் அவுட் போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


மதுரை, நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பூர்ணசந்திரன், 40. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். அலறல் சத்தம் பகுதி நேரமாக பழ விற்பனை செய்து வந்த பூர்ணசந்திரன், நேற்று மாலை 4:00 மணிக்கு, தன் சரக்கு வாகனத்துடன் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் சந்திப்பில் இருக்கும் ஈ.வெ.ரா., சிலை அருகே, ஆளில்லா போலீஸ் பூத்திற்கு சென்று, உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்; பின், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்களும், அவ்வழியே வந்த துணை மேயர் நாகராஜனும், போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் பூர்ணசந்திரன் இறந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலைக்கு முன் பூர்ணசந்திரன், வாட்ஸாப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடு. அதில் தீபம் ஏற்றுவதால் மதுரைக்கு தான் பெருமையே தவிர, யாருக்கும் பாதகமில்லை.


அங்கே தர்கா இருக்கு. அது அமைதியான இடம். அங்கிருந்து 15 மீட்டர் தள்ளி தீபத்துாண் உள்ளது. அதில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் சொல்லிய பின்னரும், தீபம் ஏற்ற விடாமல் தடுக்கின்றனர். மதுரைக்கு பெருமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே தடுக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது, அதை கோடிக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கலாம். அத்தனை பேருக்கும் முருகன் அருள் கிடைக்கும். இதனால், தர்காவுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும்போது, ஓட்டு அரசியலுக்காக தீபம் ஏற்றுவதை அரசு தடுக்கிறது. ஏற்க முடியவில்லை எங்கள் வீட்டில் எல்லாரும் தி.மு.க., தான். ஒரு ஹிந்துவாக இருந்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை. திருப்பரங்குன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துணையுடன் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டும், மாநில அரசு தடுத்தது சரியல்ல.


கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவது தடைபட்டு, மோட்சம் ஏற்றும் இடத்தில் தான் தீபம் ஏற்றி வருகின்றனர். இது தவறான விஷயம். இந்த விஷயத்தில், அறநிலையத்துறை தான் வழக்கு போட்டிருக்க வேண்டும். இது மாதிரி ஒரு பிரச்னை தர்காவுக்கு இருந்திருந்தால், அதை எதிர்த்து வக்பு வாரியம் வழக்கு போட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து மக்கள், மத விஷயத்தில் ஒன்று சேருவதில்லை. அதனால் தான், அரசு இப்படி செயல்படுகிறது. ஈ.வெ.ரா., சிலை முன், ஏன் தீக்குளிக்கிறேன் என்றால், கடவுள் இல்லை என்று சொன்னவர் முன், கடவுளுக்காக இதை செய்கிறேன். 


ஹிந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை இதுவே ஒரு பள்ளிவாசலுக்கு நடந்திருந்தால் வக்புவாரியம் கட்டாயம் செயல்படுத்தியிருக்கும். 300 ஆண்டுகள் வரை தடைப்பட்டிருந்தால் கூட அவர்கள் போராடியிருப்பார்கள். அவர்களது ஒற்றுமையை காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து சமயத்தினர் மத எண்ணத்தில் கட்டுக்கோப்பாக இருந்து போராட மாட்டோம் என்கிறோம். அதனால்தான் அரசு இப்படி செயல்படுகிறது.


என் உடல் மீது தீபம் ஏற்றுகிறேன் இதன்மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், பெரியார் சிலை முன் என் உடல் மீது தீபம் ஏற்றி கடவுள் இல்லை என்று சொன்னவர் முன், கடவுளுக்காக இவ்விஷயம் செய்கிறேன். அந்த நீதிபதிக்கு என் நன்றிகள். 2026ல் தேர்தலுக்கு பின் அடுத்த ஆட்சியிலாவது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக என் உயிரையும் பொருட்படுத்தாது இவ்வாறு செய்ய உள்ளேன். என்னை நினைத்து என் குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு மனநல டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என் மனஉளைச்சல் காரணமாகதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.


இது என் சுய முடிவு. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். என் உடம்பில் தீபம் ஏற்றி, பெரியார் சிலை முன் போலீஸ் அவுட்போஸ்டிற்குள் உயிரை தியாகம் செய்கிறேன். ஆன்மிக பூமி மதுரையில் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என இரண்டு படை வீடுகள் உள்ளன. அறுபடை வீடுகளில் இரண்டு படை மதுரையில் இருப்பது பெருமை. மீனாட்சி கோயில், அழகர்கோவில் என உள்ள ஆன்மிக பூமியான மதுரையில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சி நடத்த முடியவில்லையே என மனஉளைச்சலுக்காக என் உடலில் தீபம் ஏற்றி போலீஸ் பூத்திற்குள் உயிரை மாய்த்துக்கொள்ள உள்ளேன். இவ்வாறு வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார்.


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பூர்ணசந்திரன் ஆடியோவில் மேலும் கூறுகையில், ‘‘திருப்பரங்குன்றத்தில் போய் நிகழ்த்தலாம் என நினைத்தேன். நான் ஒரு காரியம் பண்றேன். அதனால் கோயிலுக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பெரியார் சிலை முன் நடத்துகிறேன். கடவுள் இல்லை என்று சொன்னவர் முன் கடவுளுக்காக ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்’’ எனக்கூறி ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என தனது பேச்சையும், மூச்சையும் நிறுத்திக்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar