Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வென்னிமலை கோயிலில் சங்கடஹர ... ஐயப்ப பக்தர்களுக்காக தற்காலிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை., கோயிலில் 1008 பால்குடம் பவனி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
11:01

உடன்குடி: குலசேகரபட்டணம் முத்தராம்மன் கோயிலில் 1008 பால்குடம் பவனி நடந்தது. ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றம், ஸ்ரீ ராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள் இணைந்து 6வது ஆண்டாக குலசேகரன்பட்டணம் முத்தராம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 1008 பால்குடம் அபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி டிச. 31ம் தேதி முத்தாரம்மன் கோயிலில் மஹா அபிஷேக அலங்கார தீபாரதனையும், இரவு சிறப்பு அன்னதானமும், இரவு நையாண்டி மேளம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டமும் தொடர்ந்து பக்தி கச்சேரியும் நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் மஹா கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், கஜபூஜை, கோபூஜை, மஹாலட்சுமி பூஜை, தொடர்ந்து ஏகாதச ருத்ர சுக்த, துர்கா சுக்த, மஹா ஹோம 108 கலச பூஜை, மதியம் குலசை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்து 1008 பால்குடம் புறப்படுதல், அதைத்தொடர்ந்து திரவியாஹீதி, வஸ்த்ராஹீ தி பூர்ணாஹீதி மஹா தீபாரதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 1008 பால் குடம் அபிஷேகம், 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம், மஹா அபிஷேக அலங்கார தீபாரதனை நடந்தது. இரவு 1008 திருவிளக்கு பூஜையும், அம்மன் ஊஞ்சல் சேவையும், இரவு புஷ்ப ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை, அன்னை முத்தாரம்மன் தேரில் திருபவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 1008 பால்குடம் பவனி, 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் குலசை முத்தாரம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கண்ணன், குலசை முத்தாரம்மன் தசரா குழு ஜெயமோகன், உடன்குடி பஞ்., யூனியன் துணைச்சேர்மன் ராஜதுரை, பாரத திருமுருகன் திருச்சபை தலைவர் மோகனசுந்தரம், ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றம், ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக நண்பர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருகே உள்ள சின்னத்தொட்டி பாளையம் வெல்லாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தவர்ஷினி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
அன்னூர்; திம்மநாயக்கன்புதூர் மகா பைரவர் கோவிலில், இன்று (23ம் தேதி) ஜென்ம அஷ்டமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar