கோவில்களில் துவாதசி விழா: கருட வாகனத்தில் பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 01:12
பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயில்களில் துவாதசி விழா நடந்தது.
மார்கழி மாதம் தொடங்கி அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்பட்டு வருகிறது. இதன்படி பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தினமும் காலை 5:00 மணிக்கு திருப்பாவை பாடப்பட்டு, 5:45 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியான நேற்று காலை பெருமாள் சர்வ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக வந்தார். அன்று இரவு தொடங்கி ராப்பத்து உற்சவம் நடக்கிறது. இன்று துவாதசி விழாவையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மேலும் ஏகாதசி விரதம் இருந்த பக்தர்கள் வீடுகளில் காலை, பல வகையான காய்கறிகளை சமைத்து விரதத்தை முடித்து வைத்தனர். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.