Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச விழாவில் சுட்ட வடைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாலக்காடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
11:02

பாலக்காடு; பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு எல்லா ஆண்டும் தைப்பூச உற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் இன்று காலை நடை திறந்ததும் துவங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு நிர்மல்ய தரிசனம், 4:15 மணிக்கு அபிஷேகங்கள், 4:30 மணிக்கு கணபதி ஹோமம், 5:30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 6:00 சோபனா சங்கீதம், 7:00 மணிக்கு உஷ பூஜை, 7:30க்கு காவடி எழுந்தருளும் வைபவம் ஆகியவை நடந்தது. 8:00 மணிக்கு காவடி பூஜை, அபிஷேகங்கள நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணிக்கு குனிச்சேரி சந்திரன் மாரார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்துமணி குடைகள் சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் கோன்னி சைத்ரம் அச்சு என்ற யானை மீது உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் "காழ்ச்சீவேலி என்ற நிகழ்வு நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தன. 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவருக்கு மகாதீபாராதனை நடந்தது. பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் உற்சவர் புஷ்பப் பல்லத்தில் எழுந்தருளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு அத்தாழ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்ததோடு உற்சவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar