மாரியம்மன் கோவிலில் நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2026 03:02
அவிநாசி; நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் திருவிழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் திருவிழா நடைப்பெற்றது. அதில் 50க்கும் மேற்பட்ட சிறுமியர் பெண்கள் பங்கேற்று கும்மியடித்தும், விருந்துண்டும் மகிழ்ந்தனர். அவிநாசி அடுத்த நம்பியாம்பாளையம்,ஊர் மைதானப் பகுதியில் நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் திருவிழா நடைபெற்றது. அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டர்புதூர் பகுதியில் நிலாச் சோறு நிறைவு நாளில் குழந்தைகள் ஆடிப்பாடி விருந்துண்டு மகிழ்ந்தனர்.