Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி ... திருச்செங்கோட்டில் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசி திருச்செங்கோட்டில் விஜயேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி விநாயகர், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சக்தி விநாயகர், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
11:02

நாமக்கல்; நாமக்கல், கீரம்பூர் அருகே புலவர்பாளையத்தில், 300 ஆண்டு பழமையான சக்தி விநாயகர், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 13 ஆண்டுளுக்கு முன் நடந்தது. இந்தாண்டு சக்தி விநாயகர், பகவதியம்மனுக்கு தனித்தனியாக கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடந்தது. பின், புதிய விக்ரஹங்களுக்கு கண் திறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம் செய்யப்பட்டு தீபாராதனையும், சக்தி விநாயகர், பகவதியம்மன் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், சக்தி விநாயகர், பகவதியம்மனுக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. மாலையில், வள்ளி கும்மி, ஒயிலாட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், புலவர்பாளையம் ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar