Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் ... திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உதவிய மகானை மறக்காத மக்கள் 85வது ஆண்டாக குருபூஜை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உதவிய மகானை மறக்காத மக்கள் 85வது ஆண்டாக குருபூஜை வழிபாடு

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
05:02

வடமதுரை; வடமதுரை அருகே காணப்பாடி புதுப்பட்டியில் தங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த மதுரை பகுதி மகானுக்கு நன்றி கடனாக திருவிழா போல கிராம மக்கள் 85வது குருபூஜையை நடத்தினர்.


மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு சில ஆண்டுகள் வடமதுரையிலும், கா.புதுப்பட்டியிலும் தங்கினார். கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி அவர் மீது பக்தி கொண்ட மக்கள், ‘கள்ளியடி குருநாதர்’ அழைத்தனர். புதுப்பட்டியிலே தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 1941 ஜன.21ல் மகாசமாதி அடைந்தார். அவரது நினைவாக கோயில் கட்டிய மக்கள், ஆண்டுதோறும் இறந்த நாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு குரு பூஜை விழா நடத்துகின்றனர். இன்று 85வது ஆண்டாக நடந்த குரு பூஜை விழாவிற்காக 4,160 கிலோ அரிசி கொண்டு ‛மெகா’ புளியோதரை பிரசாதம் தயாரிக்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள் கோயிலில் வழிபட்ட பின்னர் ஊர் மந்தையில் அமர்ந்தனர். விழா கமிட்டியினர் மூலம் அனைவருக்கும் புளியோதரை பிரசாதம் சேர்ந்ததும் ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் கலைந்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar