Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோவில் மாசி ... சென்னை திருவள்ளுவர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சென்னை திருவள்ளுவர் கோவிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா,முகூர்த்த கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா,முகூர்த்த கால் நடும் விழா

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
05:02

திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா இன்று முகூர்த்த கால் நடும் பணியுடன் தொடங்கியது.


திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தில் வசிப்பவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் பத்து நாளில் ஏதாவது ஒருநாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா மார்ச் 12ம் தேதி வியாழக் கிழமை இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், மார்ச் 20 தேதி வெள்ளிகிழமை பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. முத்துமாரியம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. கோயில் வாசல் அருகே வர்ணம் தீட்டப்பட்ட முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் முன்னிலையில் நடப்பட்டது. பின் முகூர்த்த காலுக்கு பால், பன்னீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முகூர்த்த கால் நடும் விழாவ முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்களும் பக்தர்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar