Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்து தருணங்களிலும் கை ... கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் அமைக்கும் பணி தீவிரம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் கோலாகலமாக நடந்த வருடாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் கோலாகலமாக நடந்த வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

25 மார்
2026
04:03

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா நேற்று துவங்கி இன்று காலை 11:30 மணிக்கு நிறைவடைந்தது.


உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2025 ஏப்., 4ல் கும்பாபிஷேகம் நடந்தது. நட்சத்திரப்படி ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு கல் தேர் மண்டபம் அருகே உள்ள அலங்கார பந்தலில் விநாயகர், முருகன், மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மாணிக்கவாசகர், சகஸ்ர லிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஹோம வேள்வி வளர்க்கப்பட்டது. குடங்களில் புனித நீர் ஊற்றி வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. பூஜைகளை கோயில் பரம்பரை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் குழுவாக இயங்கி நடத்தினர். பின்னர் மூலவர் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியில் காலை 9:18 மணிக்கு வருடாபிஷேகமும், 18 வகையான திரவங்களால் அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், ராணி அபர்ணா, திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சங்கர் உள்ளிட்ட சமஸ்தான நிர்வாகத்தினர், பக்தர்கள், அலுவலகப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கயிலாய வாத்தியம் இசைக்கப்பட்டு தேவாரம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar