கும்பாபிஷேகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி தேவையில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 06:03
சென்னை: ‘ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த, தேர்தல் கமிஷன் அனுமதி தேவையில்லை’ என, துறை செயலர் மணிவாசன் தெரிவித்துள்ளார்.
அவர் அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டசபை தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் கமிஷன் வழங்கிய அறிவுறுத்தலின்படி, கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த, தேர்தல் கமிஷன் அனுமதி பெறத் தேவையில்லை. எனவே, கும்பாபிஷேகம் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், எந்தவொரு அரசியல் கட்சி பிரமுகரையும் அழைத்து, நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.