வெள்ளி புருஷா வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2026 12:03
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் 4ம் நாள் காலை, வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்.1ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். திருவிழாவின் 4ம் நாள் காலை, வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மார்ச் 27ம் தேதி வெள்ளி ரிஷப வாகனக் காட்சியும், பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான திருத்தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி காலையும் நடைபெறவுள்ளன.