திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மார்ச் 21ல் துவங்கிய ராம நவமி விழாவில் தினம் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சாதுக்கள், சான்றோர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீ ராம நாம ஜெபம் நடந்தது. மஹா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரமானது. உற்ஸவர்கள் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் காலை மூலவர்களுக்கு திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை முடிந்து மாலையில் பக்தி சொற்பொழிவு நடந்தது.