கடலுார்: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலுார், பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 24ம் தேதி சிறப்பு பூஜை, 25ம் தேதி திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் கரக திருவிழா நடந்தது. நேற்று தீமிதி விழா நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு உற்சவம், 29ம் தேதி தெப்பல் உற்சவம், 3ம் தேதி பட்டாபிஷேக உற்சவம் நடக்கிறது.